என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் புகார்
நீங்கள் தேடியது "போலீஸ் புகார்"
ஒரத்தநாடு அருகே கள்ளக்காதலனுடன் இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். (வயது 30). விவசாயி. இவரது மனைவி சந்திகா (21). இவர்களுக்கு சச்சின்குமார் (1½) என்ற மகன் உள்ளார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கருப்பையன் மகன் முருகேசன் (21) இவர் மலேசியாவில் வேலைப் பார்த்துவிட்டு கடந்த மாதத்திற்கு முன்புதான் ஊர் திரும்பினார். இந்நிலையில் முருகேசனுக்கும் சந்திகாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பாக்கியராஜ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திகா தனது மகனை விட்டுவிட்டு சம்பவதன்று கள்ளக்காதலன் முருகேசனுடன் வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டாராம்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சேலம்:
‘மீ டு’ வில் பிரபல நடிகர்கள், கவிஞர்கள் உள்பட பலர் மீது நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் புகார் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் சேலத்தை சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தின் பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாவும், அப்போது தான் மறுத்ததால் ஆடைகளை கிழித்து தொந்தரவு செய்ததாகவும் கூறி இருந்தார்.
அந்த புகார் குறித்து மாநகர உதவி கமிஷனர் ஒருவரை விசாரிக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் அந்த பெண்ணை அழைத்து விசரணை நடத்தினார். அப்போது கண் கலங்கிய அந்த பெண் கதறி அழுதார். மேலும் அந்த பாதிரியாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. பேச்சாளரும், எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 18-ந்தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை இந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது டுவிட்டர், பேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் சமூக விரோதிகள் எனது செல்போன் எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்திகளும் வருகிறது.
இதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எச்.ராஜா எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய தூண்டி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது குறித்து வெற்றிவேல் போலீசில் புகார் அளித்தார்.
ராயபுரம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-
டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இதையடுத்து தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.

புதுவை பூமியான்பேட்டையில் இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு அனுஷா (வயது 23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவகி கணவரை விட்டு பிரிந்து மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அனுஷா திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக நிற்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அனுஷா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அனுஷா இல்லை.
இதையடுத்து தேவகி தனது மகள் மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் அனுஷாவை நைனார் மண்டபத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீர புத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

×

X